பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blast

கோவையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் பீதியில் அலறி ஓடினர்.

கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ் கோவை விமான நிலையத்தில் பணி புரிந்து வருகிறார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் மூன்று மாடிகள் கொண்ட சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு மாணிக்கராஜ் வெளியே சென்று உள்ளனர். அப்பொழுது இரண்டாவது மாடியில் மின் கசிவு ஏற்பட்டு தீப் பிடித்து உள்ளது. அப்பொழுது அக்கம், பக்கத்தினர் சிங்காநல்லூர் காவல் நிலையம் மற்றும் பீளமேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பு வீடு தீப்பற்றி கொண்டு எறிந்த நிலையில், திடீரென அங்கு இருந்த வீட்டின் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் தீ பிடித்ததால் அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் அனைத்தனர்.

வீட்டில் யாரும் இல்லாததால் தீ விபத்து ஏற்பட்டு சிலிண்டர் வெடித்து சம்பவத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என பீளமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola