Cockroach Janta Party|’’சோம்பேறிகளுக்கு முன்னுரிமை’’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி..விசித்திர பின்னணி!

Continues below advertisement

வேலையில்லா இளைஞர்களுக்காக புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கட்சியின் உறுப்பினர் சேர்க்கை விதிமுறைகளும், தேர்தல் வாக்குறுதிகளும் தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.”

சமீபத்தில் போலிச் சான்றிதழ்கள் தொடர்பான வழக்கை விசாரித்தபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியதாக வெளியான ஒரு கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. அதில் வேலையில்லா இளைஞர்கள் "கரப்பான்பூச்சிகள்" என்று குறிப்பிடப்பட்டதாக தகவல்கள் பரவின.
இந்த கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் இருந்த அபிஜித் தீப்கே Cockroach Janta Party என்ற பெயரில் இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளார்.

இந்த கட்சியில் உறுப்பினராக சேர்வதற்கும் வித்தியாசமான நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளன.
வேலையில்லாமல் இருக்க வேண்டும்
சோம்பேறியாக இருக்க வேண்டும்
எப்போதும் ஆன்லைனில் இருக்க வேண்டும்
ஆவேசமாக பேசும் திறன் இருக்க வேண்டும்
இவை அனைத்தும் நையாண்டி பாணியில் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் என்றாலும், இதுவரை  1 லட்சத்துக்கும்  மேற்பட்ட இளைஞர்கள் இதில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இந்த கட்சியின் வாக்குறுதிகளும் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு மாநிலங்களவை பதவி வழங்க தடை
பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு
கட்சி மாறும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு 20 ஆண்டுகள் தேர்தல் தடை
இதற்கிடையில், சூர்ய காந்த் தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், இளைஞர்களை அவ்வாறு குறிப்பிடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் அதற்குள், ‘ இந்த cjp எனப்படும் Cockroach Janta Party இணையத்தில் தனி அரசியல் பேசுபொருளாக மாறியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola