CJI Chandrachud Vs Nedumpara : எதிர்த்துப் பேசிய வக்கீல்.. வெளியில் விரட்டிய நீதிபதி..

Continues below advertisement

வாயை மூடிட்டு உட்காரு.. இல்லையெனில் நீதிமன்றத்திலிருந்து வெளியே அனுப்பி விடுவேன்.. என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தன்னுடைய பொறுமையை இழந்து நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞரை பார்த்து கத்தியுள்ள சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது...

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  மூத்த வழக்கறிஞர் நான் என அடிக்கடி குறுக்கிட்டு பேச முயன்றார் மூத்த வழக்கறிஞரான மேத்யூஸ் நெடும்பாறை. இதனால் முதலில் நீங்கள் அமைதியா அமருங்கள், இடைமறித்து பேசாதீர்கள் என சொல்லி வந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து  "அவரை நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றுங்கள்" என கோபமாக பேசினார்.. அந்த வீடியோ தான் தற்போது பலரால் பகீரப்பட்டு வருகிறது..

மற்றோரு மூத்த வழக்கறிஞரான நரேந்திர ஹூடா தன்னுடைய வாதங்களை முன்வைத்து கொண்டிருந்த போது, கேள்வி ஒன்றை எழுப்பினார் தலைமை நீதிபதி சந்திரசூட்.. உடனே மூத்த வழக்கறிஞரான நான் ஒரு கருத்தை கூற விரும்புகிறேன் என குரல் எழுப்பினார் மேத்யூஸ் நெடும்பாரை..

பொறுமையாக இருங்கள், அவருடைய வாதத்தை கேட்ட பின், நீங்கள் பேசலாம் என்றார்..

அதற்கு “என்னை நீங்கள் மதிக்காவிட்டால் நீதிமன்றத்தை விட்டு வெளியேறி விடுவேன்" என்றார் மேத்யூஸ்  நெடும்பாரை

இது உங்களுக்கு எச்சரிக்கை.. நீதிபதிகளிடம் இப்படி பேசக்கூடாது.. இந்த நீதிமன்றத்திற்கு நான் தான் பொறுப்பு. செக்யூரிட்டிகள் உடனடியாக அவரை இங்கிருந்து அகற்றுங்கள்" என எச்சரித்தார். அப்போது நெடும்பாறை," நானே இங்கிருந்து செல்கிறேன்" என பதில் அளித்தார். அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி சந்திர சூட்," நீங்கள் போகலாம்.. ஆனால் அதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. கடந்த 24 ஆண்டுகளாக நீதித்துறை நான் பார்த்திருக்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஒருபோதும் ஆணையிட அனுமதிக்க முடியாது"

அப்போது மீண்டும் குறுக்கிட்ட மேத்யூஸ் நெடும்பாறை," நான் 1979 ஆம் ஆண்டிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார். 

இதனால் மேலும் கோபமான சந்திரசூட்," நெடும்பாறை தொடர்ந்து இதேபோல் பேசினால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்" என எச்சரித்தார். இதை அடுத்து அங்கிருந்து வெளியேறிய மேத்யூஸ் நெடும்பாறை பிறகு மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்தார். "நான் எந்த தவறும் செய்யவில்லை.. தலைமை நீதிபதியை அவமதித்ததற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் ..எனக்கு அநீதி இழைக்கப்பட்டது" என்றார். உச்சநீதிமன்றத்தில் நெடும்பாரை தலைமை நீதிபதி சந்திரசூட்டுடன் சண்டையிடுவது இது முதல் முறை கிடையாது. கடந்த மார்ச் மாதம் இதேபோல நெடும்பாறை குறுக்கிட்டு பேசிய போது தலைமை நீதிபதி எச்சரித்தார். ஆனாலும் அவர் கேட்கவில்லை. இதனால் கோபம் அடைந்த தலைமை நீதிபதி "என்னிடம் கத்தி பேசக்கூடாது.. இது பார்க்கில் நடக்கும் கூட்டம் அல்ல.. நீங்கள் நீதிமன்றத்தில் இருக்கிறீர்கள்" என பேசினார். இந்த சம்பவம் அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது


உட்காரு.. இல்லைன்னா நீதிமன்றத்திலிருந்து வெளியே அனுப்பிடுவேன்

உங்களை எச்சரிக்கிறேன்..

SECURITY-ய கூப்பிடுங்க.. அவர வெளியே அழைச்சிட்டு போங்க..

நான் பதிலளிக்கலாம.. MY LORD..

நான் பேச முயற்சிக்கும் போது, நீங்கள் என்னை தடுத்து நிறுத்துகிறீர்கள்..

இங்கிருக்கும் வழக்கறிஞரிலேயே மூத்த வழக்கறிஞர் நான்..

”கடந்த 24 ஆண்டுகளாக நீதித்துறையை பார்த்து வருகிறேன் நான்” - சந்திரசூட்

”நான் 1979ம் ஆண்டிலிருந்து பார்த்து கொண்டிருக்கிறேன்” - மேத்யூஸ்

நிதிமன்ற அவமதிப்பு உத்தரவு பிறப்பிக்கட்டுமா?

அதனை தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய மேத்யூஸ் நெடும்பாரை

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram