3 MLAக்களின் அறமற்ற செயல் ஆதரிப்பது ஆபத்து விஜய்க்கு SS பாலாஜி WARNING

Continues below advertisement

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் எம்.எல்.ஏ தவெக-வில் இணைந்திருப்பது அறமற்ற செயல் என விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மே 13-ம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக-வில் எஸ்.பி வேலுமணி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 25 பேர் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த நிலையில், அந்த 25 பேரில் 3 பேர் தங்களின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்திருக்கின்றனர்.

தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த 3 பேரும் அங்கேயே ஆதவ் முன்னிலையில் தவெக-வில் இணைந்தனர்.

இச்செயலுக்கு இபிஎஸ், ஸ்டாலின் ஆகிய இருவருமே கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "3 எம்.எல்.ஏ-க்களின் செயல் அறமற்றது. அவர்களை ஆதரிப்பது ஆபத்தானது. இது, நேர்மையான அரசியலை கொடுப்போம் என்ற தவெக மாட்டிரும் விஜய்யின் கூற்றின் மீதான அச்சுறுத்தலாகும்" என்று எச்சரித்திருக்கிறார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தவெக ஆட்சியமைக்க வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்த விசிக கடந்த வாரம் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றது. வன்னி அரசுக்கு சமூகநீதித்துறை ஒதுக்கப்பட்டது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola