சட்டமன்றத்தில் விஜய்க்கு ஆதரவு அமமுக காமராஜ் நீக்கம் TTV அதிரடி!

Continues below advertisement

சட்டமன்றத்தில் வெளிப்படையாக தவெக-வுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த அமமுகவின் ஒரே எம்.எல்.ஏ காமராஜை டிடிவி தினகரன் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக சார்பில் காமராஜ் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.

திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு எதிராக களமிறக்கப்பட்ட இவர் சுமார் 68,000 வாக்குகள் பெற்று 1500 வாக்குகள் வித்தியாயசத்தில் வெற்றியும் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல், தவெக ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத சமயத்தில் காமராஜ் தனது ஆதரவு கடிதம் கொடுத்ததாகவும், அதை ஆளுநரிடம் விஜய் சமர்பித்ததாகவும் தகவல்கள் வெளியாகவே, அது போலி கடிதம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இவ்வாறிருக்க, சட்டமன்றத்தில் இன்று உரையாற்றிய காமராஜ், தவெக-வுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன் காமராஜை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்.

இது குறித்த அறிக்கையில், "காமராஜ் கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது.

காமராஜின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காகப் பாடுபட்ட அமமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகிகள், வாக்களித்த மன்னார்குடி வாக்காளர்களுக்கு இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம்.

ஆகவே, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்,

கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும்,

கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

காமராஜ் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்" என்று டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola