10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதுக்கோட்டை முதலிடம்! வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியகியுள்ள நிலையில், இதில் மொத்தமாக 94.31 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

2025–26 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் மொத்தமாக, 8,70,643 பேர் தேர்வெழுதினர்.

இந்த நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று காலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

இதில், 8,21,105 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை விட 0.51 சதவிகிதம் அதிகமாக மொத்தம் 94.31 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

4,19,891 மாணவிகளும், 4,01,214 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.32 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், தேர்வெழுதிய 370 சிறைவாசிகளில், 354 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1,931 அரசுப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

மாவட்ட வாரியாக அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 97.57 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்கள் 97 சதவிகிதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்று அடுத்த நான்கு இடங்களில் உள்ளன.

மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வரும் 22-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறுதேர்வு ஜூலை 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola