தூய்மை பணியாளர்கள் போராட்டம்”போலீஸ் அடி...வலி தாங்க முடியல” கதறி அழுத பெண் | Sanitary Workers Arrest

Continues below advertisement

சென்னையில் இன்று நடைப்பெற்ற தூய்மைபணியாளர்கள் போராட்டத்தில் காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்ததாக கூறி தூய்மைப் பணியாளர் கதறி அழும் காட்சி... வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்களை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது என்று கிட்டத்தட்ட 14 நாட்கள் இரவு, பகலாக போராடி வந்தனர் சென்னையை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள். அமைச்சர்கள் சேகர்பாபு, நேரு, மேயர், அதிகாரிகள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் போராட்டத்தை தூய்மை பணியாளர்கள் கைவிடவில்லை.

இறுதியாக அனுமதியின்றி போராட்டம் நடத்துவதையும், பாதயை அடைத்து உட்கார்ந்திருபப்தையும் அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் சொன்ன பிறகு இரவோடு, இரவாக தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து வலுக்கட்டாயமாக காவல்துறையால் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த ஹைய் கோர்ட் தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடியாது என உத்திரவிட்டது. மேலும் தூய்மை பணியாளர்கள் சம்பளத்தை தனியார் நிறுவனம் குறைக்க கூடாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தது.

அடுத்தக்கட்டமாக தங்களை பணி நிரந்திரம் செய்யக்கோரி சென்னையில் மே தின பூங்க முன்பு செப் 4 ஆம் தேதி 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திடீர் போரட்டத்தில் ஈடுப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல் நேற்று முன் தினம் கொருக்கு பேட்டையில் உள்ள தூய்மைபணியாளர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் தங்கள் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். அவர்களையும்  போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் இன்று பீச் ரோட்டில் உள்ள உழைப்பாளர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். உடனடியாக போலீசார் திரண்டு இருந்த 100-க்கு மேற்பட்ட தூய்மைபணியாளர்களை குண்டுகட்டாக கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்ததாக கூறி தூய்மைப் பணியாளர் கதறி அழும் காட்சி... வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola