Milk Van Accident | லாரி ஏசி வெடித்து விபத்து சாலையில் சிதறிய பால் பாக்கெட்டுகள் சென்னையில் பரபரப்பு

Milk Van Accident | லாரி ஏசி வெடித்து விபத்து சாலையில் சிதறிய பால் பாக்கெட்டுகள் சென்னையில் பரபரப்பு

சென்னை அசோக் பில்லர் வளைவில் நேற்று இரவு 10:30 மணியளவில் பால் பாக்கெட் ஏற்றி வந்த லாரியில் ஏசி இயந்திரம் வெடித்து விபத்து ஏற்பட்டது.

கர்நாடக மாநிலத்தின் அரசு நிறுவனமான நந்தினி பால் பாக்கெட் நிறுவனத்தின் பால் பாக்கெடுகளை ஏற்றி வந்த லாரி அசோக் பில்லர் மெட்ரோ எதிரே வளைவில் திரும்பும்போது ஏசி இயந்திரம் பழுது காரணமாக வெடித்துள்ளது. இதனால் லாரி கண்டைனரின் ஒரு பகுதி முழுவதுமாக சேதம் அடைந்து  ஆயிரக்கணக்கான பால் பாக்கெட் சாலையில் சிதறியது. 

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. ரோட்டில் பால் பாக்கெட்டுகள் சிதறி கிடந்த போதும் அங்கிருந்த பொதுமக்கள் யாரும் பால்பாக்கெட்டுகளை எடுத்துச் செல்லாமல் ரோட்டில் சிதறி கிடந்த பால் பாக்கெட்டுகளை போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஓரமாக அடுக்கி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அசோக் நகர் பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola