ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!

Continues below advertisement

சென்னை அரசுப் பேருந்தில் வயதான நகைக் கடை ஊழியரிடம், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டி திருடப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி சிறையிலடைக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும், திருடுபோன தங்கக்கட்டிகளை போலீஸார் இன்னும் மீட்டுத் தரவில்லை என முதியவர் புகாரளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த 73 வயது முதியவர் வரதராஜலு. இவர் கோவையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் சுந்தர் என்பவரிடம் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மார்ச் 27-ம் தேதி, செங்குன்றத்தில் உள்ள நகைக் கடையொன்றில், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 714 கிராம் தங்கக் கட்டி பெற்றுக்கொண்டு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது பேருந்தில் அவருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்த ஏறிய பெண் ஒருவர், கீழே சிதறிய சில்லறையைத் தேடுவது போல அவர் மீது வேண்டுமென்றே விழுந்து அவரின் கவனத்தை திசைதிருப்பியுள்ளர். அடுத்த நிறுத்தத்திலேயே அந்தப் பெண் இறங்கிச் சென்றுவிட்டார்.

பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கிய முதியவர், தனது பையிலிருந்த தங்கக் கட்டி காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் போலீஸில் புகாரளித்ததையடுத்து நடத்தபட்டது.

அதில், பேருந்தின் CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும், அந்தப் பேருந்தின் வழித்தடத்தில் உள்ள மற்ற CCTV காட்சிகளை ஆய்வுசெய்ததில், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நான்கு பெண்களை போலீஸார் அடையாளம் கண்டனர்.

அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்ததது. மேலும் அவர்களில் ஒருவர் தான், பேருந்தில் முதியவர் அருகில் அமர்ந்தவர் என்றும், சுதா என்ற அவர்தான் தங்கக் கட்டியை திருடினார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், தங்கக் கட்டியை பறிகொடுத்த முதியவர், இன்னமும் தங்கக் கட்டி மீட்டுத்தரப்படவில்லை என்றும், உடனடியாக மீட்டுத் தருமாறும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர் சிறைக்கையிலடைக்கப்பட்டு ஆறுமாதங்களாகியும், திருடுபோன தங்கக் கட்டியை போலீஸார் மீட்டுத் தராத சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola