SOFA வைத்து சீண்டிய உதய் ”நாங்க புஷ்பா அரசா” பதிலடி கொடுத்த விஜய்

சி.வி.சண்முகத்தை முதலமைச்சர் விஜய் சந்திப்பதற்கு முன் அவரது இல்லத்திற்கு சோஃபா வந்திறங்கியதில் சந்தேகம் இருப்பதாக சொல்லி ஷோபா ஆட்சியை முதலமைச்சர் விஜய் செய்வதாக விமர்சித்த உதயநிதிக்கு விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் தவெக தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கக்கூடிய பெரிய கட்சியான அதிமுக கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவு பட்டிருக்கிறது. பிளவுபட்ட ஒரு அணி உங்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து நடந்த இன்சிடென்ட் தான் ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட். பிளவு பட்ட குரூப்பில் இருக்கக்கூடிய ஒரு தலைவரின் வீட்டிற்கு ஒரு  புது சோபா செல்கிறது. சோபா பின்னாடியே புது முதலமைச்சரும் செல்கிறார். புதுமையாக ஆட்சி நடத்துவீர்கள் என்று பார்த்தால், 'புஷ்பா' படம் போல் ஆட்சி நடத்துகிறீர்கள் என விமர்சித்தார்.

இந்தநிலையில் சட்டப்பேரவையில் இதற்கு பதில் சொல்லாத முதலமைச்சர் விஜய், தற்போது உதயநிதிக்கு பதிலடி கொடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை. மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம். மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர்” என கூறியுள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola