Chennai Police Attacked | “ஏய் மேல கை வைக்காத...”போலீஸை அடித்த இளைஞர்கள் போதையில் அடாவடி

சென்னை செல்போன் பரித்துவிட்டு தப்பி ஓடிய இளைஞர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். மது போதையில் இருந்த இளைஞர்கள் போலீசாரை தாக்கி ஆபாசமாக பேசியுள்ளனர். இதன் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பில்  தங்கி யூபிஎஸ்சி தேர்வுக்கு படித்து வரும் தாமஸ் என்ற இளைஞர் நண்பர்கள் லட்சுமி நாரயணன், மற்றும் கபிலனுடன் பிரியாணி சாப்பிட சென்றுள்ளார். மது போதையில் இருந்த அவர்கள் டூவீலரில் வந்தவர்களை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி அவர்களது செல்போனை பரித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

அந்த இளைஞர்களை ரோந்து போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். மது போதையில் இருந்த இளைஞர்கள் போலீசாரை தாக்கி ஆபாசமாக பேசியுள்ளனர். இதன் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.பின் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில் அங்கே காவல் ஆய்வாளர் முன்பே தகறாரில் ஈடுப்பட்டு காவால் ஆய்வாளர் அறையை அடித்து நெருக்கியுள்ளனர். இதில் இரண்டு காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola