Chennai MTC Bus : “BAD..BAD..BAD..BOY...அரசு பேருந்தை இயக்கியபடி REELS! சர்ச்சையில் சிக்கிய DRIVER!

சென்னையில் ஆபத்தான முறையில்  அரசு மாநகரப் பேருந்தை இயக்கியப்படியே ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் மாநகரப் பேருந்துகளின் சேவை முக்கியமானதாக இருக்கிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் இதன் மூலம் பலன் அடைந்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு மாநகர பேருந்துகளை இயக்க நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இச்சூழலில் தான் சென்னை வட பழனியில் இருந்து  இயக்கப்படும் மாநகர பேருந்தில் தற்காலிக ஓட்டநர் மற்றும் நடத்துனர்களாக பணியாற்றி வரும் இருவர் ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கியபடியே ரீல்ஸ் பதிவிட்டு சோசியல் மீடியாவில் பகிர்ந்தனர். 

பேருந்தை இயக்கியபடியே இவர்கள் ரீல்ஸ் வெளியிட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயணிகளை பேருந்தில் வைத்துக்கொண்டே இவர்கள் வீடியோ வெளியிட்டதற்கு கடும், விமர்சனங்கள் எழுந்தனர். அதோடு இவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் அவர்கள் இருவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்ய மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola