Breastmilk Sale | சென்னையில் தாய்ப்பால் விற்பனை! உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!

Continues below advertisement

சென்னையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவர், தனது கடையில் சட்டவிரோதமாக பாட்டில்களில் அடைத்து தாய்ப்பால் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக  உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டு வந்தனர். அந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram