Accident News | குறுக்கே ஓடிய குதிரை வரிசையாக மோதிய வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி! | Chennai

ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிப்பு 

விபத்தில் குதிரை உயிரிழப்பு, 5க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதி 
_____

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னை செல்லும் மார்க்கத்தில் கார், 2 தனியார்  தொழிற்சாலை பேருந்துகள், காலி மது பாட்டில்களை ஏற்றி வந்த லாரி என அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற குதிரை மீது கார் மோதிய நிலையில் குதிரை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் அடுத்தடுத்து பின்னால் வந்த 4 வாகனங்கள் விபத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளது. 

காரில் வந்தவர்கள் பேருந்தில் வந்தவர்கள் என ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்னை செல்லும்  மார்க்கத்தில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காயமடைந்தவர்ள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola