நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ

Continues below advertisement

சென்னையின் கிரீம்ஸ் லேனில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை, பெங்களூரு நிம்ஹான்ஸிலிருந்து பெங்களூரு விமான நிலையம் வழியாக சென்னைக்கு தானம் செய்யப்பட்ட நுரையீரலை கொண்டு செல்ல ஒரு பசுமை வழித்தடத்தை உருவாக்கி புதிய மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. 

ஜீவசர்த்தகதே (கர்நாடகா) மற்றும் டிரான்ஸ்டன் (தமிழ்நாடு) ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ், விமான நிலைய அதிகாரிகள், சென்னை போக்குவரத்து காவல்துறை, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் அப்பல்லோ மருத்துவமனைகள் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் இந்த தடையற்ற செயல்பாடு சாத்தியப்பட்டுள்ளது. 

இது சிக்னல் இல்லாத பாதையை உறுதிசெய்து உறுப்பகளை பாதுகாப்பான முறையில் கொண்டு சேர்க்க உதவியது. 

பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இரண்டு நகரங்கள், இரண்டு மருத்துவமனைகள் மற்றும் இரண்டு மாநில மாற்று அதிகாரிகலும் முக்கியமான அந்த ஒவ்வொரு நிமிடங்களை யும்  மிக கவனத்துடன் கையாண்டனர்.

அவசர சிகிச்சை யின் தீவிரத்தை உணர்ந்து, உயிருக்கு போராடும் நோயாளிக்கு தக்க நேரத்தில் உதவி புதிய வாழ்க்கையை வழங்கியுள்ளனர். இவர்களின் அசாதாரண ஒத்துழைப்பு பாராட்டுக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola