Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு பூகம்பம் என்பது போல் அங்கு படிக்கும் மாணவி ஒருவருக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பேராசியர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார். நேற்று மாலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் மனுவுடன் வந்த மாணவி, பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு நேரடியாகவும், செல்போன் மூலமாகவும் பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்றும், விஷயத்தை வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இரவு நேரத்தில் ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்புவதாகவும் தொடர்ந்து கால் செய்து தொந்தரவு செய்வதாகவும் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி தனது தோழிகளிடமும் இதே போன்ற பாலியல் சிலுமிஷங்களில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அண்ணா பல்கலைக்கழக கமிட்டியிடம் புகார் அளித்துள்ளாதகவும், விரைவில் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் அந்த மாணவி.

இதனை அடுத்து காவல் ஆணையர் அருண் உடனடியாக விசாரனையை தொடங்க உத்தரவிட்டார். இந்நிலையில் அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மாணவியின் செல்போனில் பேராசிரியர் அனுப்பிய மெசேஜ்களை கைப்பற்றி போலீசார் விசாரனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola