அதிமுக-வுக்கு இந்த கதியா? கட்சியை விட்டே போறேன் Ex அமைச்சர் செம்மலை அதிரடி

Continues below advertisement

அதிமுக-வில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், அக்கட்சியின் கழக அமைப்புச் செயலாளர் செம்மலை அதிமுக-விலிருந்து விலகியிருக்கிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக, இபிஎஸ் அணி, எஸ்.பி.வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்திருக்கிறது.

சட்டமன்றத்தில் கட்சியின் உத்தரவை மீறி 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவு அளித்ததால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார் இபிஎஸ்.

இந்தப் பிரச்னையால் சட்டமன்றத்தில் அதிமுக கொறடா கூட இன்னும் நியமிக்கப்படவில்லை.

இத்தகைய உட்கட்சி பிரச்னைக்கு நடுவே அதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செம்மலை கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " தேர்தலுக்குப்பிறகு அஇஅதிமுக-வில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கி விட்டது.

இதே மனநிலையில் தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள்.

நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம், அம்மா காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த கதியா?" என செம்மலை வேதனை தெரிவித்திருக்கிறார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola