ABP News

Chengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

Continues below advertisement

விக்கிரவாண்டி அருகேயுள்ள எண்ணாயிரம் கிராமத்தில் வாங்கி கடனுக்கு மாததவனையை கட்ட நிதி நிறுவன ஊழியர்கள் கூறிய போது ஏற்பட்ட சண்டையில் இரண்டு மாத கர்ப்பினியின் கர்ப்பம் கலைந்து விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள எண்ணாயிரம் கிராமத்தில் சவுண்டு சர்வீஸ் நடத்தி வரும் மணிகண்டன் என்பவர் திண்டிவனத்தில் செயல்பட்டு வரும் விஸ் ஸ்டார் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு கடனான 12 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். இரண்டு மாத தவனையை கட்ட தவறியதால் நிதி நிறுவன  ஊழியர்கள் மணிகண்டன் வீட்டிற்கு சென்று மாததவனையை கட்ட கடந்த ஜனவரி 30 ஆம் தேதி காலையில் கூறி இரவு 8 மணி வரை வீட்டிலேயே இருந்துள்ளனர்.

நிதி நிறுவன ஊழியர்கள் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி நிஷாந்தினியிடம் மாத தவணை கட்டியே ஆக வேண்டுமென தெரிவித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டனின் மனைவி நிஷாந்தினி செல்போனில் படம் பிடித்ததால் நிதி நிறுவன ஊழியர்கள் செல்போனை பிடுங்கி கீழே தள்ளி உள்ளனர். இதில் நிஷாந்தினியின் முடியை பிடித்து கீழே தள்ளியதால் மூன்று வருடங்களுக்கு பிறகு இரண்டு மாத கர்ப்பினியாக இருந்த நிஷாந்தினிக்கு கரு கலைந்துவிட்டதாகவும் கருகலைந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நிதி நிறுவன ஊழியர்கள் மணிகண்டன், தமிழ் இலக்கியன்  இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். 

இது தொடர்பாக நிதி நிறுவன ஊழியர்கள் தமிழ் இலக்கியனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பணத்தை கட்ட சொல்லி கூறியிருந்தோம் ஊழியர் மணிகண்டன் சண்டை போட்டதாகவும் ஆனால் தள்ளி விடவில்லை எனவும்  மறுப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram