Bussy Anand | என்னது PRESSMEET-ஆ? விஜய் பாணியில் தப்பிய புஸ்ஸிஷாக்கான தவெக நிர்வாகிகள்! | Vijay

பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு பயந்து மேடைக்கு வருவதாக கூறிவிட்டு அவசர அவசரமாக  பாதியிலேயேகாரில் ஏறி தெரித்து ஓடிய புஸ்ஸி ஆனந்த்.


செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் தனியார் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். தனியார் கடை திறப்பு விழாவை முடித்த பிறகு, கடையை சுற்றி பார்த்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெறுவதாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். 

பத்திரிகையாளர் சந்திப்பு இருப்பதாக தெரிவித்ததின் அடிப்படையில் பத்திரிகையாளர்கள், காத்திருந்தபோது மேடைக்கு சென்று பேட்டி தருவதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மேடைக்கு சென்று காத்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகள் மற்றும் கருப்பு உடை அணிந்திருந்த பவுன்சர்களின் உதவியுடன், பத்திரிக்கையாளர் கேள்விக்கு பயந்து கடையிலிருந்து அவசர அவசரமாக வெளியேறி காரில் ஏறி 30 நொடிக்குள் சிட்டாக பறந்து சென்றார்.  

கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய புஸ்ஸி ஆனந்த் வருகையை முன்னிட்டு, அவருக்கு பூங்கொத்து கொடுப்பதற்காக காத்திருந்த நிர்வாகிகளும் ஏமாற்றும் அடைந்தனர். கட்சியின் பொதுச் செயலாளர் பேட்டி கொடுக்க பயந்து ஓடிய சம்பவம் தவெக தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola