Namakkal Viral Video | ஆளே இல்லாமல் வந்த பைக்..தெறித்து ஓடிய பெண்!நடந்தது என்ன?

ஆளே இல்லாமல் வந்த பைக்..தெறித்து ஓடிய பெண்!நடந்தது என்ன?

நாமக்கல்லில் மர்மமான முறையில் இருசக்கர வாகனம் ஒன்று ஓட்டுநர் இன்றி தானாக சாலையில் ஓடியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உள்ள மக்கிரி பாளையம் பிரிவு சாலையில் சௌந்தர்ராஜன் நந்தினி தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போதுபள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது சங்ககிரியில் இருந்து வந்த மாருதி எர்டிகா கார் இருசக்கர வாகனத்தில் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது, இதில் தம்பதிகள் இருவரும் பைக்கில் இருந்து குதித்த நிலையில் அந்த பைக் மட்டும் ஆளே இல்லாமல் நீண்ட தூரம் தானாக சென்று பின்னர் சாலையில் நடுவே உள்ள தடுப்பில் மோதி கீழே விழுந்தது. விபத்துக்குள்ளான தம்பதிகள் இருவருக்கும் பலத்த காயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.ஆளே இல்லாத பைக்கை கண்டு சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் பயந்து ஓடும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola