Bigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!
ஐயா என்னை சிறையில் அடையுங்கள், தொட்டாக்கள் பாய்ந்து இறப்பதை காட்டிலும், சிறை கம்பிக்குள்ளாவது உயிருடன் வாழ நினைக்கிறேன் என்று சரித்திர பதிவேடு குற்றவாளியான பிகில் மணி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை அடுத்து சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனராக இருந்துவந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை போலீஸ் கமிஷனராகப் அருண் IPS பொறுப்பேற்றார். அவரின் முதல் செய்தியாளர் சந்திப்பில் அருண் ஐபிஎஸ் தெரிவித்த ஒற்றை வரி ”ரெளடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழிகளிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்” என்பது தான். ஆனால் அது அப்போது புரிந்ததோ இல்லையோ, ஆட்டம் காட்டிய் ரவுடிகளுக்கு தற்போது நன்றாக புரிந்திருக்கும்.
சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பதவி ஏற்றது தொடர்ந்து, ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் காவல்துறை சார்பில் முடக்கி விடப்பட்டுள்ளன. தொடர்ந்து சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும், வெளியே இருக்கும் ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று இரவு ரவுண்ட்ஸில் காவல்துறையினர் ஈடுபடுவது, அவர்களின் குடும்பத்தாருக்கு அறிவுரை வழங்குவது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வரும் ரவுடிகளை அடக்குவது என தொடர்ந்து காவல்துறை அதிரடி காட்டி வருகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ரவுடிகளை உச்சபட்ச நடுக்கத்தில் வைத்திருப்பது கடந்த சில வாரங்களில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நடந்த மூன்று என்கவுண்டர் சம்பவங்கள் தான். பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் , தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் ,தோப்பு பாலாஜி , மற்றும் பல்வேறு வழக்குகளின் தொடர்புடைய சீசிங் ராஜா ஆகிய மூன்று ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் அடுதடுத்து நடந்த இந்த 3 எண்கவுண்டர்களால், எங்கே லிஸ்டில் அடுத்தது நம்முடைய பேர் தான் இருக்குமோ என்ற பயத்தில் ரவுடிகள் கலங்கி போய் இருக்கிறார்கள்.
இதன் உட்சபட்சமான நிகழ்வு தான் சென்னை தாம்பரம் பகுதியில் நடந்துள்ளது, எங்கே போலீஸ் புல்லெட்டுக்கு இறையாகி விடுவோமோ என்ற அச்சத்தில், தாமாக நீதிமன்றத்திற்கு வந்து சரணடைந்துள்ளார் ஒரு ரவுடி.
அம்பேத்கர் நகர் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்தவர் ரவுடி பிகில் மணி. இவர் மீது கொலை வழக்கு உட்பட 17 வழக்குகள் ஓட்டேரி, சேலையூர், பீர்கன்காரனை, பள்ளிகரனை, குடுவாங்சேரி ஆகிய காவல்நிலையங்களில் உள்ளன.
இந்நிலையில் தான் கடந்த வாரம் மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, ஆதனூர் சாலையில், பிகில் மணி மற்றும் அவரின் கூட்டாளியான மற்றோரு சரித்திர பதிவேடு குற்றவாளியான சிலம்பு என்ற சிலம்பரசன் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓட்டேரி போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரையும் கைது செய்ய முயன்ற போது, போலீசை கண்ட அவர்கள் தப்பியோடினர்.
அப்போது, சாலையில் தவறி விழுந்து, ரவுடிக்கு சிலம்புவுக்கு காவல்துறை சார்பில் காலில் மாவுகட்டு போடப்பட்டது. அவரிடமிருந்து 1.150 கிலோ கஞ்சா, ஒரு கத்தி மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிடவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் காவல்துறையிடமிருந்து தப்பி தலைமறைவாக இருந்த பிகில் மணியை நேற்று தாம்பரம் நீதிமன்றத்தில் திடிரென சரணடைந்துள்ளார்.
நீதிபதியின் முன் சரணடைந்த பிகில் மணி, ஐயா எனக்கு என்னுடைய பாதுக்காப்பு குறித்து நினைத்தால் பயமாக இருக்கிறது. நான் எண்கவுண்டரில் சுட்டு கொல்லபடுவதை விட உயிருடன் சிறையில் இருப்பதையே விரும்புகிறேன். அதனால் என்னை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த 3 என்கவுண்டர்களால் உயிருக்கு ஆபத்தான நிலை நிலவுவதை தொடர்ந்து, பிகில் மணி நீதிமன்றத்தில் ஆஜரானதாக பிகில் மணியின் வழக்கறிஞர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிகில் மணியை போன்றே பல ரவுடிகள் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் நடுங்கும் நிலை உருவாகியுள்ளது..