குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்

சேலம் பள்ளி மாணவர்கள் 3 பேர் மது போதையில் சிறுவனை கொடூரமாக கொலை செய்து, அதனை வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மணியனூரை சேர்ந்த 16 வயது சிறுவன் மல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

அதேபகுதியை சேர்ந்த மற்றொரு 16 வயது சிறுவன் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

அதேபோல், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மணியனூரில் வசித்து வருகிறார்.

இவர்கள் மூன்று பேரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாக இணைந்துள்ளனர்.

இவர்கள் நேற்று முன்தினம் இரவு மல்லூர் அருகே உள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்களுடன் தொடர்புடைய,  சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் அங்கு வந்துள்ளார்.

 அடுத்த சிறிது நேரத்தில், மதுபோதையில் இருந்த மூன்று சிறுவர்களுக்கும் 17 வயது சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது 17 வயது சிறுவன் அந்த 3 சிறுவர்களை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த 3 சிறுவர்களும் சேர்ந்து 17 வயது கத்தியால் சரமாரியாக குத்தியும், முகத்தை சிதைத்தும் கொலை செய்தனர்.

பின்னர் கொலைசெய்யப்பட்ட சிறுவனின் உடலை வைத்து வீடியோ எடுத்து கூச்சலிட்டுள்ளனர்.

அந்த சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள், தப்பி ஓட முயன்ற சிறுவர்களில் 2 பேரை பிடித்து மல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கொலை செய்யப்பட்ட சிறுவனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola