4000 குழந்தைகள்... ARUN ICECREAM கின்னஸ் சாதனை சென்னையை மிரளவைத்த சம்பவம்

Continues below advertisement

பிரபலமான ஐஸ்கிரீம் பிராண்டான அருண் ஐஸ்கிரீம்ஸ் சென்னையில் மிக நீண்ட வரிசை தொடரின் ஒரு அங்கமாக 4000 குழந்தைகள் ஐஸ்கிரீம் சுவைக்கும் கின்னஸ் சாதனை நிகழ்த்தி இருக்கிறது. 

சென்னை நீலாங்கரையில் குழந்தைகள் ஒரு நிமிடம் தொடர்ந்து ஐஸ்கிரீமை உட்கொண்டதால் இந்த சாதனை அடைந்துள்ளது. இந்த முயற்சியின் போது, பங்கேற்பாளர்கள் ஒரு மனிதச் சங்கிலியை உருவாக்கி, தங்கள் வலது பக்கத்தில் இருப்பவருக்கு கைகளைப் பிடித்துக் கொண்டு ஐஸ்கிரீமை ஊட்டிவிட்டனர். இது தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த சங்கிலியை உருவாக்கியது.

இச்சாதனை குறித்து ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆர்.ஜி. சந்திரமோகன் கூறுகையில், ஐஸ்கிரீம் சாப்பிடுவதில் 4000 குழந்தைகள் ஒருங்கிணைந்து ஒரு கின்னஸ் சாதனை படைப்பதைப் பார்க்கும் இந்நேரம் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியான, மனதை நெகிழச் செய்யும் ஒரு தருணமாகும். நிலையான உயர்தரம் மீதும் மற்றும் அருந்தும் அனைவருக்கும் ஐஸ்கிரீம் வழங்கும் நிகரற்ற மகிழ்ச்சி ஆகியவற்றின் மீதான அர்ப்பணிப்பு எங்களது பயணத்தின் உந்துசக்தியாக எப்போதும் இருந்து வருகிறது என்றார்.

]நாராயணா குழுமப் பள்ளிகள், நெல்லை பள்ளி, ராமச்சந்திரா பள்ளி, சுதா நந்தா வித்யாலயா, வளரும் மனம், எஸ்வி பள்ளி, வேல்ஸ் குளோபல் மற்றும் பத்மா சேஷாத்ரி பால பவன் சீனியர் செகண்டரி பள்ளி உள்ளிட்ட பங்கேற்கும் பள்ளிகளின் முன்னிலையில், ஹட்சன் அக்ரோ புராடக்ட்டின் துணைத் தலைவர் திரு. ச. சத்யனுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது.

சில்லறை வர்த்தக செயல்பாட்டில் வலுவான இருப்பையும், நுகர்வோரின் பல்வேறு விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் பல்வேறு வகைகள், சுவைகளை உள்ளடக்கிய தயாரிப்புகளின் பரந்த தொகுப்பையும் கொண்டு இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் பிராண்டுகளில் ஒன்றாக அருண் ஐஸ்கிரீம் திகழ்கிறது. அருண் ஐஸ்கிரீம்ஸின் பெருமைக்கு, இந்த கின்னஸ் உலக சாதனை மேலும் ஒரு மகுடத்தைச் சேர்க்கிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola