Amar Prasad Reddy | ”இது அதிமுக கோட்டையா? இந்தியா மோடி கோட்டை” அதிமுக தொண்டர் vs அமர்பிரசாத்

Continues below advertisement

அதிமுகவின் கோட்டை என தொண்டர் ஒருவர் கத்தியதும், அதை ஒத்துக் கொள்கிறேன், ஆனால் இந்தியா பிரதமர் மோடியின் கோட்டை என பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி -வைகை அணை சாலை பிரிவு பகுதியில் பாஜகவின் பட்ஜெட் மற்றும் நரேந்திர மோடியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனி பாஜக சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி கலந்துகொண்டார். அவர் பேச ஆரம்பிக்கும் போது அங்கு வைக்கப்பட்டிருந்த மைக் லேசாக ஆடியது. உடனே முதலமைச்சர் ஸ்டாலினுடன் அந்த மைக்கை ஒப்பிட்டு கலாய்த்தார் அமர்பிரசாத் ரெட்டி.

அப்போது கீழே அமர்ந்திருந்த அதிமுக தொண்டர் ஒருவர், இது அதிமுகவின் கோட்டை இங்கு ஒன்றும் செய்ய முடியாது என பதில் கொடுத்தார். அதை ஏற்றுக் கொள்வதாக சொன்ன அமர்பிரசாத் அதன்பிறகு பாரத் மாதா கி ஜெய் என கோஷம் எழுப்பினார். பின்னர் இந்தியா பிரதமர் மோடியின் கோட்டை என்பதை மறந்து விட வேண்டாம் என வசனம் பேசினார். உடனடியாக மேடையில் இருந்த பாஜகவினர் கைதட்டி வரவேற்றனர். தமிழ்நாட்டை அதிமுக கோட்டை என ஒத்துக் கொண்ட அமர்பிரசாத் அடுத்த நிமிடமே இந்தியா பிரதமரின் கோட்டை என சொன்னதால் சலசலப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola