ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
தமிழ்நாடு முழுவதும் கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள 717 மதுபான கடைகளை மூட முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற இதனைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் புழக்கத்தை ஒழித்தல் ஆகியவற்றிற்கு முதற்கட்டமாக விஜய் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
ஏற்கனவே கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமானதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து - ரயில் நிலையங்கள் ஆகியவை அருகே 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் 717 டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யால் உத்தரவிடப்பட்டது.
மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.
பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பமே அதிரடியாக மதுபான கடைகளை மூடி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் விஜய்