Aadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVK

Continues below advertisement

கொள்கை எதிரி பாஜக அழைத்து வந்து திமுக நடத்திய விழாவுக்கு பல் இளித்து கொண்டு திமாவளவன் சென்றது நாடறியும் என்பதாக தவெக செய்தி தொடர்பாளர் லோயோலா மணி  விமர்சித்துள்ளது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டிற்கு பிறகு பொது நிகழ்ச்சிகளில் ஏதும் விஜய் பங்கேற்காமல் இருந்து வந்தார், அவ்வப்போது பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் மட்டும் கட்சி நிர்வாகிகளை சந்திப்பது, எளியோருக்கு உதவுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இப்போது மீண்டும் விஜய், ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. திமுகவை தன்னுடைய அரசியல் எதிரியாக அறிவித்துள்ள விஜயை வைத்து புத்தக வெளியீட்டு விழாவை ஆதவ் அர்ஜூனா நடத்துவதால் திமுக தரப்பு உஷ்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தவெக செய்தி தொடர்பாளர் லோயோலா மணி  திமுக மற்றும் திமாவளவனை சரமாரியாக விமர்சித்துள்ளது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எங்கள் கொள்கைத் தலைவர் என்று சொல்ல இன்றுவரை திராவிட இயக்க சில தலைவர்கள் தயங்கி வரும் சூழலில் அண்ணல் அம்பேத்கர் எங்கள் கொள்கைத் தலைவர் என்று சொன்னது மட்டுமில்லாமல் முதல் மாநாட்டில் வானுயர பேனரை வைத்தும், அண்ணல் அம்பேத்கர் அவர்களை எல்லோரும் படியுங்கள் என்று அடுத்த தலைமுறைக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களை கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் எங்கள் தலைவர் தளபதி அவர்கள்.

திமுக தலைவர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களை எந்த நிலையில் வைத்திருக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். கொள்கை எதிரி பிஜேபி என்று கபட நாடகம் போட்டுக் கொண்டு ராஜ்நாத் சிங் அவர்களை அழைத்து விழா நடத்தியது மட்டுமில்லாமல் அந்த விழாவிற்கு கூட்டணி கட்சிகளை சார்ந்த தலைவர்கள் எல்லோரும் பல் இளித்து கொண்டு சென்றதை நாடறியும்.

அதானிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தொடர்பு?அதானி எதற்கு திரு.ஸ்டாலின் அவர்களின் வீட்டிற்க்கு வந்தார் என்று கேட்டு சொல்ல முடியுமா? அண்ணல் அம்பேத்கர் பேரனை விட ஐயா கருணாநிதி பேரன் பெரியவராகிட்டாரா..சகோதரி கனிமொழி அவர்களை விடவா உதயநிதி ஸ்டாலின் கட்சிக்காக உழைத்து விட்டார். சகோதரி கனிமொழி அவர்கள் இல்லாமல் தூத்துக்குடிக்கு ஆய்வு செய்ய உதயநிதி சென்றாரே அதை பற்றி பேச உங்களுக்கு துணிச்சல் இருக்கா? பெண்ணாக இருந்து கொண்டு பல நெருக்கடிகளுக்கு மத்தியில் உழைத்து முன்னேறி வருகின்ற கனி மொழி அவர்களை விடவா உங்களுக்கு உதயநிதி புனிதராகிவிட்டார். கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏ பெயரை போட மாட்டிக்கிறார்கள் என்று மிகவும் வேதனையோடு ஆளூர் ஷாநவாஸ் பேசினாரே நினைவு இருக்கிறதா? அதைப் பற்றி ஏன் பேச உங்களுக்கு வாய் வரவில்லை. என திமுக விளாசி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram