விசிலுக்கு சிறுத்தைகள் முட்டு வார்த்தையை விட்ட ஆ.ராசா எதிர்ப்பு வந்ததும் ஓட்டம்

Continues below advertisement

தவெக அமைச்சரவையில் இடம்பெற இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும், விசிக-வும் ஒப்புக்கொண்ட நிலையில், திமுக எம்.பி ஆ.ராசா காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற தவெக, காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தபோதும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களின் நிபந்தனையற்ற ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

அப்போதே ஆதரவு கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம்தர தவெக தயாராக இருப்பதாகக் கூறப்பட்டது.

அதேவேளையில், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பாதி பேர் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்ததால், தவெக அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்போவதாக பேச்சு அடிபட்டன.

இதனாலேயே, விசிக போன்ற கட்சிகள் தவெக அமைச்சரவையில் சேர தயக்கம் காட்டின.

பின்னர், ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தரப்பிலிருந்து உறுதியான பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும், விசிக-கவும் அமைச்சரவையில் இணைய தங்களின் கட்சிக்கும் ஆலோசித்தன.

நேற்று அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு இரண்டு கட்சிகளும் அமைச்சரவையில் பங்குபெறுவதாக அறிவித்தன.

இந்த நிலையில் திமுக எம்.பி ஆ.ராசா தனது எக்ஸ் தளப் பதிவில், இரு கட்சிகளின் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

அந்தப் பதிவில், "முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’
மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’
வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு
முட்டுக் கொடுக்குமென்றால்;
பூ முடித்தவனை புறந்தள்ளி —
புணர்ச்சிக்கு வேறிடம் 
தேடுவதில் தவறில்லை!
பெரியாரின்
‘காலதேச வர்த்தமான’ த்திற்கு
காத்திருப்போம் ;  என்றாலும் 
களமாடுவோம் !
வெற்றி நமக்கே!!" என்று ஆ.ராசா குறிப்பிட்டிருக்கிறார்.

ஆ ராசாவின் இத்தகைய பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

விசிக முன்னாள் MLA எஸ்.எஸ்.பாலாஜி எக்ஸ் தளத்தில், "அதிகாரம் எளியவர்க்கு
அதிலென்ன ஆத்திரம் 
ஆற்றாமையால் அள்ளிவீசும் 
அவதூறுகள் அசைத்திடாது
அமைதியாய் கடப்பது 
அநாகரீகம் தவிர்க்கவே.
அநீதி தொடர்ந்து 
அனைத்தும் உரைத்தால்
அணைக்க முடியா 
அனலில் தகித்து போவீர்!" என்று எதிர்வினையற்றினார்.

எதிர்ப்புகளால் தனது பதிவை நீக்கிய ஆ. ராசா இன்னொரு பதிவில், "என் வீட்டுத் தோட்டத்துத் 
தென்னை 
கூனி வளைந்து 
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் 
அதற்குப் பெயர் 
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? " என விமர்சித்திருக்கிறார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola