Vellore kid : கொரோனா கொடூரம்.. குடும்பப் பொறுப்பை தலையில் சுமக்கும் 13 வயது சிறுவன்..

Continues below advertisement

குடும்ப வறுமை காரணமாக கேள்விக் குறியாக்கப்பட்டுள்ள சிறுவனின் கல்வி: "அப்பாவுக்கு பிறப்பில் இருந்தே இரண்டு காலும் ஊனம் , எங்க அப்பா வழி பாட்டி 'தாந்தோனி' தான் சின்ன வயசுல இருந்து காய்கறி வியபாரம் செஞ்சு எங்க அப்பாவ பார்த்துக்கிட்டாங்க . அதுக்கு அப்புறம் தான் , எங்க அப்பா காய்கறி வியபாரத்த முழுசா கத்துக்கிட்டு , வேலூர் டிஐஜி ஆபீஸ் எதிரே உள்ள பலவன்சத்துக்குப்பம் உழவர் சந்தையில் கடை வச்சி வியாபாரம் செஞ்சிட்டு வந்தாரு , போன மாசம் கொரோனா அறிகுறி இருக்குனு இங்குள்ள தனியார் ஹோச்பிடலுக்கு கூட்டிட்டு போனோம் , டாக்டருங்க அவர செக் பண்ணிபாத்துட்டு , இது கொரோனவா இருக்கும்னு சொன்ன ரெண்டே நாலுல இறந்துட்டாரு . அப்பா ,பாட்டி இரண்டுபேருமே இறந்தது தெரிஞ்சி தினமும் கடன் காரங்க 'உங்க அப்பா 50 ஆயிரம் தரணும் , ஒரு லட்சம் தரணும்னு' வீட்டு வாசல்ல நின்னுகிட்டு மிரட்டுறாங்க . அதனால தான், அண்ணா அப்பா பார்த்த காய்கறி வியபாரத்த நான் பார்த்துக்குறேன் " என தனது சோக கதையை கூற ஆரம்பித்தார் 13 வயதாகும் யஷ்வந்த் .

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram