100 Variety foods : ‘100 வகை சாப்பாடு! மருமகனுக்கு SURPRISE! அசத்திய மாமியார்

Continues below advertisement

எடுத்தா ஆந்திராவுல தான் யா பொன்னு எடுப்பேன் என இளைஞர்களை சொல்ல வைக்கும் அளவிற்கு புது மாப்பிள்ளைக்கு 100 வகை உணவுகள் சமைத்து விருந்து வைத்து மணமகள் வீட்டார் அசத்தியுள்ளனர். 100 வகை உணவுகளை பார்த்து புது மாப்பிள்ளை கொடுத்த ரியாக்சன் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரத்னகுமாரி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். தமிழில் ஆடி மாதம் போல் ஆந்திரம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆஷாதா மாதம் கடைபிடிக்கின்றனர். இந்நிலையில் ஆசாதா மாதம் முடிந்து மனைவியின் வீட்டிற்கு வந்த ரவி தேஜாவுக்கு அவருடைய மாமியார் 100 வகையான பச்சரிசி உணவுகளை தயார் செய்து விருந்து படைத்துள்ளார்.

100 வகையான உணவுகளுக்கு முன்பு அமர்ந்து அந்த தம்பதிக்கு உணவு அருந்தியுள்ளனர். அதில் பல வகை சாதம், மைசூர் பாக், லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகள், முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பலகாரம், பழங்கள் என அறுசுவை உணவுகளும் இடம்பெற்றுள்ளது.

எங்கே தொடங்குவது எங்கே முடிப்பது என தெரியாமல் 100 வகை உணவுகளை பார்த்து மணமகன் தேஜா வாயடைத்து இருக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது..

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram