Theni Jallipatti muruku : முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை..

Continues below advertisement

சின்னவங்கலருந்து பெரியவங்க வரைக்கும் ஸ்னாக்ஸ் சாப்ட்ர பழக்கம் எல்லாருக்குமே இருக்கும். அதிலயும் ஒரு சில ஸ்னாக்ஸ் ஐடம்ஸ் ரொம்பவே விரும்பி சாப்டுவாங்க . அப்டி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்னாக்ஸ் பிடிக்கும். ஆனா எல்லாருக்குமே பிடிக்குற ஒரு ஸ்னாக்ஸ்னா அது முறுக்குதா. என்ன முறுக்குதானேனு அவ்ளோ அசால்ட்டா நினைக்காதீங்க இதுல நம்மலோட பாரம்பரியமும் இருக்கு அதாங்க தமிழர்களின் பாரம்பரிய சிற்றுண்டி உணவுல முதண்மைச் சிற்றுண்டி உணவுனும் சொல்லுவாங்க. இந்த முறுக்கு தென்னிந்திய மாநிலங்கல்ல பெரும்பாலும் இந்தியா, இலங்கை , மலேசியா போன்ற நாடுகல்ல இருக்குர பெரும்பாலான தமிழர்கள் விரும்பி சாப்ட்ர ஒரு சிற்றுண்டி உணவு பொருள்தான் இந்த முறுக்கு. என்னப்பா ஒரு முறுக்குக்கு இப்டி கத சொல்லனும்னு கேக்குறீங்களா அப்டி ஈஸியா சொல்லிட முடியாதுங்க. இது வரைக்கும் ஏதோ ஒரு கடைல போய் ஒரு முறுக்கு குடுங்கனு கேட்டு கடைக்காரர் கொடுக்குற முறுக்க வாங்கி சாப்ட்டு இருப்போம். ஆனா இப்போலாம் ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு வெரைட்டி குடுக்க வேண்டியது இருக்கு. அப்டி முறுக்குக்கு 30 வகையான வெரைட்டியா தயாரிக்குற இடம்தான் தேனி மாவட்டத்துலருந்து பெரியகுளம் போர்ற வழில இருக்குற ஒரு கிராமத்துல இயற்கையா கிடைக்குற தக்காளி, பூண்டு, கருவேப்பிலைனு இயற்கை முறையில் தயாரிக்குற ஒரு முறுக்கு தயாரிகுற இடத்ததா நாம பாத்தது. அப்டி என்ன 30 வகையான வெரைட்டி முறுக்குனு கேக்குறீங்களா வாங்க பாக்கலாம். ஜல்லிப்பட்டிங்கர ஒரு கிராமத்துல சின்னதா ஒரு குடிசை தொழிலா ஆரம்பிச்சு இப்ப சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளுக்கு இங்க இருந்து முறுக்கு ஏற்றுமதி செய்ர அளவுக்கு முறுக்கு தயாரிக்கும் தொழில் வளர்ந்துருக்குனு சொல்றாரு இந்த முறுக்கு கம்பெனியோட உரிமையாளர். இந்த சின்ன கிராமத்துல இருக்க பெண்கள் அனைவரும் பெரும்பாலும் இந்த முறுக்கு தயாரிக்கும் கம்பெனிலதா வேலை செய்றத பாக்க முடியுது. இங்க தயாரிக்கப்படும் முறுக்குல சேர்க்கப்படும் வெங்காயம் , தக்காளி , கொத்தமல்லி , கருவேப்பிலைனு தங்களோட சொந்த விவசாயத்துல இயற்கை முறையா தயாராகும் உணவு பொருட்கள கொண்டு முறுக்கு தயாரிக்குறதா இந்த கம்பெனியோட உரிமையாளர் சொல்றாரு. நாங்க இதுவரைக்கும் எந்த ஒரு கலப்பட கெமிக்கல்ஸ்ம் பயன்படுத்துரது இல்லனும் தங்களோட வெளி மாவட்டங்கல்லயும் சரி வெளி நாடுக்கு ஏற்றுமதி செய்றதுலயும் சரி எங்க முறுக்குக்கு எப்பவுமே ஒரு தனி மார்க்கெட் இருக்குனும் உரிமையாளர் பெருமையா சொல்றத பாக்க முடிஞ்சது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram