Yuvan shankar raja Speech: யுவனுக்கு விஜய் மகன் கொடுத்த சர்ப்ரைஸ்

Yuvan shankar raja Speech: இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திரை உலகில் அறிமுகமாகி நேற்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்த நீண்ட பயணத்தில், இசை ரசிகர்களை அள்ளி குவித்திருக்கும் யுவன், மக்களுக்கு பிடித்த இசையை தொடர்ந்து இசைத்து வருகிறார். நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், சுவாரஸ்யமான பதில்களை தந்தார் ஒரு நாள், விஜயுடன் பணியாற்றும் ஜகதீஷ் ஒரு புகைப்படத்தை அனுப்பினார். அதில், விஜய் மகன் “யுவனிசம்’ என்ற டி-சர்ட் அணிந்திருந்தார். அதை பார்த்ததும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அதை நான் வெளியில் பகிரவில்லை. ஏனென்றால், மிகவும் பர்சனலாக உணர்ந்தேன்! பின் ஒரு நாள் எனக்கு தெரியவந்தது, அந்த புகைப்படத்தை அனுப்ப சொன்னதே விஜய் சார்தான் என்று!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola