Yuvan Speech as Movie Director: பெண்களை மையப்படுத்திய கதை..இயக்குநராகும் யுவன்
Yuvan Speech as Movie Director: இதுவரை இசையமைப்பாளராக மட்டும் அனைவருக்கும் பரிச்சயமாகி இருந்த யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குனர் இளன் இயக்கத்தில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் ஆனார். அதையடுத்து இப்போது ஏலிஸ் மற்றும் விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட படங்களை யுவன் சங்கர் ராஜா தற்போது தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திரை உலகில் அறிமுகமாகி நேற்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இந்த நீண்ட பயணத்தில், இசை ரசிகர்களை அள்ளி குவித்திருக்கும் யுவன், மக்களுக்கு பிடித்த இசையை தொடர்ந்து இசைத்து வருகிறார். நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மீடியாக்களை சந்தித்து, இதுவரை தனக்கு அளித்த ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி தெரிவித்தார் யுவன். அதோடு தனது வருங்கால பிளான் பற்றியும் யுவன் ஓப்பனாக பேசி உள்ளார். இந்நிலையில் இவர் ஒரு திரைப்படம் இயக்கப்போகிறார் என்று சில நாட்களாக அரசல் புரசலாக பேசப்பட்டது. அதனை உறுதி செய்து இந்த சந்திப்பில் அப்டேட் கொடுத்துள்ளார்.