Woman Attacked Telugu Actor| ”திருட்டு பயலே உன்ன விடமாட்ட”வில்லன் நடிகருக்கு அடி!ஆந்திர பெண் ஆவேசம்!

Continues below advertisement

ஹைதராபாதில் உள்ள திரையரங்கு ஒன்றில் பெண் பார்வையாளர் ஒருவர் அப்படத்தில் நடித்த நடிகரை நேரில் பார்த்தவுடன் ஆவேசமாக சென்று திட்டி, அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக திரைப்பட வில்லன்களை நிஜ வில்லனாக நினைத்து பார்வையாளர்கள் பலர் அவர்களை திட்டுவதும் வசைபாடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இங்கு ஒருபடி மேலே போய் வில்லன் நடிகரை நேரில் பார்த்த பெண் அவரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே நிஷாம்பேட்டில் உள்ள ஜிபிஆர் மாலில் அமைந்துள்ள திரையரங்கில் லவ் ரெட்டி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அப்போது திரைப்படம் முடிந்தவுடம் படக்குழுவினர் பார்வையாளர்களை காண சர்ப்ரைஸ் விசிட் கொடுத்தனர். இந்நிலையில் அந்த திரைப்படத்தில் நாயகியின் அப்பாவாக நடித்த என் டி ராமசாமி, நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிளைமேக்ஸ் காட்சியில் ஹீரோயினை அவர் செங்கல்லால் தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதனால் அவரை நேரில் பார்த்த உடன் பெண் பார்வையாளர் ஒருவர் இருக்கையில் இருந்து எழுந்து ஆவேசமாக மேடையை நோக்கி சென்றுள்ளார். அந்த பெண் வந்த வேகத்தில் ராமசாமியை திட்டியதோடு அடிக்கத்தொடங்கினார். 

இதைத்தொடர்ந்து சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அந்த பெண்ணை தடுத்தனர். ஆனாலும் செய்வதறியாமல் அப்பெண் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அவர்  திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தாரே தவிர நிஜ வாழ்வில் அல்ல என அவருக்கு எடுத்துரைத்து அங்கிருந்து அவரை அனுப்பினர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது,

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram