”இப்படி முதுகுல குத்திட்டியே” விக்ரம் சுகுமாரனின் வைரல் POST... அந்த நடிகர் யார்? | Madha Yaanai Koottam | Raavana Kottam

மதயானை திரைப்பட இயக்குனர் விக்ரம் சுகுமாரன் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒருவன் தடுத்து இருக்கிறான் முதுகில் குத்தி விட்டான் நான் அறிமுகம் செய்தவனே துரோகம் செய்துவிட்டான் என பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. இவரை ஏமற்றியவர் யார் என சமூக வளைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கதிர், ஓவியா நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற, மதயானை கூட்டம் படத்தின் மூலம் விக்ரம் சுகுமாரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தரமான படத்தை வழங்கி இருந்தாலும், அடுத்தடுத்து படங்கள் அமையாமல் இருந்தார். சென்னையில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தான், மதுரைக்குச் சென்று தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்துவிட்டு பேருந்தில் வீடு திரும்ப புறப்பட்டார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சரிந்து விழுந்த விக்ரமை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விக்ரம் சுகுமாரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நல்ல படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் சிரமமே என்ற கூற்றிற்கு விக்ரம் சுகுமாரனும் விதிவிலக்கல்ல. தொடர் வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த அவரது இயக்கத்தில், 10 ஆண்டுகள் கழித்து கடந்த 2023ம் ஆண்டு சாந்தனு நடிப்பில் இராவண கோட்டம் திரைப்படம் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை அந்த படம் பெறவில்லை. மதயானை கூட்டம் திரைப்படம் இயக்கத்திற்கு பிறகு எனக்கு வேறுப்பட வாய்ப்பு வரவில்லை நானும் யாரும் அழைக்கவில்லை என்றுதான் நினைத்தேன் ஆனால் வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒருவன் தடுத்திருக்கிறான் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன். அவன் வேறு யாரும் அல்ல அவனை நான் தான் மனிதனாக்கினேன் பிரசத்துரோகி என் எதிரிக்கு கைகொளியாக செயல்பட்டு இருக்கிறான் இதை கேட்டதிலிருந்து ஆண்டவன் மீது தான் ஆத்திரம் வருகிறது ஆத்திரம் பட்டு ஒன்னும் ஆகப்போவதில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார். அவர்ன் இயக்கிய இரண்டு படங்களில் அவர் மதயானைக்கூட்டம் திரைப்படத்தில் கதிரையும் வேல ராமமூர்த்தியும் அறிமுக செய்தார். இதை வைத்து இவர்களை குறிப்பிட்டு தான் விக்ரம் சுகுமாறன் தெரிவித்தாரா என சமூக வலைதளங்ஙகளில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தேரும் போரும் எனும் படத்தை இயக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த விக்ரம் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விக்ரம், சினிமா துறையை சேர்ந்த சிலர் என்னை ஏமாற்றிவிட்டார்கள். ஆனா, அவற்றை நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் இல்லாததால் அவர்களின் பெயரை குறிப்பிடவில்லை” என வேதனை தெரிவித்து இருந்தார். இயக்குனராக மட்டுமின்றி எழுத்தாளராகவும், நடிகராகவும் சினிமாவில் எப்படியேனும் வென்றுவிட வேண்டும் என கடைசி வரை போராடி, எதிர்பாராத விதமாக உயிரிழந்த விக்ரம் சுகுமாரனுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola