பாலியல் குற்றச்சாட்டு வாய் திறந்த விஜய் சேதுபதி சைபர் க்ரைமில் புகார் | Vijay Sethupathi Sexual Harassment

நடிகர் விஜய் சேதுபதி மீது, சில நாட்களுக்கு முன் பாலியல் மற்றும் போதை பொருள் குற்றச்சாட்டு பதிவு இணையத்தில் வைரலான நிலையில் விஜய் சேதுபதி இதற்க்ய் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் ரம்யா மோகன் என்பவர், விஜய் சேதுபதி தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை பல ஆண்டுகள் பாலியல் இன்பத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெண் விஜய் சேதுபதியால் பயன்படுத்தப்பட்டதாகவும், இப்போது அந்த பெண் மறுவாழ்வு மையத்தில் இருப்பதாகவும் அந்த பதிவில் பகிரப்பட்டிருந்தது. விஜய் சேதுபதி, கேரவனுக்கு வருவதற்காக அந்த பெண்ணுக்கு ரூ.2 லட்சத்தையும், கேரவன் ஓட்டுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் தருவதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது வைரலான சில மணி நேரங்களில், அந்த பதிவு சம்பந்தப்பட்ட பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு மீண்டும் விளக்கம் கொடுத்த ரம்யா மோகன், சம்பந்தப்பட்ட பெண்ணின் பாதுகாப்பிற்காக இந்த பதிவுகளை நீக்குவதாக குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து விஜய் சேதுபதி பேசுகையில் என்னை பற்றி கொஞ்சமாக தெரிந்தவர்களுக்கு கூட இந்த புகார் உண்மைஇல்லை என தெரியும். அவர்களே இதை பார்த்தால் சிரிப்பார்கள். தன்னை பற்றி எல்லோரும் பேச வேண்டும் என்பதற்காக அந்த பெண் இப்படி செய்திருக்கிறார். சில நிமிடங்கள் புகழ் அவருக்கு இதனால் கிடைக்கிறது. அதை அனுபவித்துக்கொள்ளட்டும். இது பற்றி தற்போது சைபர் க்ரைமில் புகார் அளித்து இருக்கிறேன் இதை அப்படியே விட்டுவிடுங்கள். எனவும் விஜய் சேதுபதி தெரிவித்து இருக்கிறார். 

தான் நடித்த படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இவ்வாறு அவதூறு பரப்புவதன் மூலம் அப்படத்தின் வெற்றி பாதிக்கப்படும் என சிலர் நினைத்திருக்கக்கூடும் ஆனால் அது நடக்காது . இன்று சமூக ஊடகக் கணக்கு இருந்தால் யார் வேண்டுமானாலும் யாரைப் பற்றியும் எதையும் பேசலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பாலியல் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola