G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANS

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'The GOAT' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் தளபதியாகக் கொண்டாடப்படும் நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்' (The GOAT). வரும் நாள்களில் நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக இறங்கப் போவதால், வழக்கமாக விஜய் படங்களின் ரிலீசுக்காக அவரின் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பை காட்டிலும், இப்படத்திற்கு இரட்டிப்பு ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது ஒரு சில காரணங்களால் 'தி கோட்' படத்தின்  ரிலீஸ் தேதி தள்ளிப் போகக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
தி கோட்' படத்தில் நடிகர் விஜய் இரட்டைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதனால் இப்படத்தின் டீ ஏஜிங் பணிகள் தீவிரமாக லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. முதலில் வெளியான தகவலின்படி இந்த டீ ஏஜிங் பணிகள் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது. அதை கணக்கில் கொண்டு படத்தை செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவெடுத்து இருந்தது. ஆனால் தற்போது டீ ஏஜிங் பணிகள் நிறைவடைய கால தாமதமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது முழுமையாக முடிவடைய கூடுதலாக பத்து நாட்கள் எடுத்துக் கொள்ளகூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால் படத்தை ஏற்கெனவே குறிப்பிட்டது போல செப்டம்பர் 5ஆம் வெளியிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola