விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா! ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்! திருமணம் எப்போது?
விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண தேதி குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் நடிகையாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இருவரும் சேர்ந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் காதல் காட்சிகள் ரசிகர்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றது. நிஜ வாழ்க்கையிலும் இருவரும் ஒன்றுசேர வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சொல்லி வந்தனர்.
இந்தநிலையில் இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருவதாக தகவல் பரவி வந்தது. அதற்கு 2 பேருமே மறுப்பு தெரிவித்தனர். ஆனால் இருவரும் ஒன்றாக சேர்ந்து வலம் வரும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகி வந்தது. அதற்கு இந்த ஜோடி எந்த பதிலும் சொல்லாமல் சைலண்டாகவே இருந்தனர். அதேபோல் இருவரும் ஒரே இடத்தில் மாறி மாறி ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வந்தனர்.
சென்னையில் நடந்த, புஷ்பா 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் 'நீங்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளவர் ஒரு நடிகரா? என தொகுப்பாளர் கேட்டதற்கு இது எல்லாருக்குமே தெரிந்தது தான் என கூறி, விஜய் தேவரகொண்டா உடனான காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினார் ராஷ்மிகா.
இந்தநிலையில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் வைத்து நிச்சயதார்த்தத்தை சீக்ரெட்டாக முடித்துள்ளதாக சொல்கின்றனர். அடுத்த ஆண்டு இறுதியில் திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது.
ராஷ்மிகா மந்தனாவும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் கடந்த 2017ம் ஆண்டு காதலித்து நிச்சயதார்த்தல் செய்து கொண்டனர். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த நிச்சயதார்த்தம் திருமணத்தில் முடியாமல் இருவரும் பிரிந்தனர்.