VJ Siddhu Issue | ‘’முடிஞ்சா கை வைங்க’’மாட்டிவிட்ட TTF FANS..சிக்கலில் VJ SIDDHU?
தடுக்கி விழுந்தா ஜெயில் என்பது போல் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனனை போலீசார் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து அவர்மீது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் என்ன எதுக்கெடுத்தாலும் டிடிஎஃப் மட்டும் இப்படி பன்றீங்க என்பது போல் அவரது ஆதரவாளர்கள் இன்னொரு பிரபல யூடிபரான விஜே சித்துவையும் தற்போது சிக்கலில் மாட்ட வைத்துள்ளனர்..
அதிவேகமாக பைக் ஓட்டுதல், சட்ட விரோதமாக பொது இடங்களில் இளைஞர்களை கூட்டி சந்திப்பு நிகழ்த்தியது என பல சர்ச்சைகளில் சிக்கிய டிடிஎஃப் வாசன் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன், செல்போன் பேசிக்கொண்டே காரில் சென்றதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அவர் தினமும் மதுரை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும், அவரது செல்போனை 3 நாட்களுக்கு காவல்துறையிடம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது அவரது ரசிகர்களை டென்ஷனாக வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து பிரபல யூடியூபரான விஜே சித்து கார் ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசிக்கொண்டு பயணிக்கும் புகைப்படத்தை தற்போது இணையத்தில் ட்ரெண்டாக்கினர் டிடிஎஃப் ஃபேன்ஸ்.. அதை பதிவிட்டு டிடிஎஃப்க்கு ஒரு சட்டம் சித்துவுக்கு ஒரு சட்டமா என கேள்விகளை அடுக்கி வந்தனர்.
இந்த நிலையில் செல்போனில் பேசியபடி காரை ஓட்டியதாக சித்துவுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
முன்பு தனியார் யூடியூப் சேனலிலும் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிய விஜே சித்து தற்போது விஜே சித்து விலாக்ஸ் என்ற youtube சேனலை தொடங்கி இருக்கிறார். அவரை சுமார் 2.58 லட்சம் மில்லியன் ஃபாலோயர்கள் பின்தொடர்கின்றனர். மேலும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக நடிகர்களை அழைத்து வந்து மொட்டை மாடி பார்ட்டி என்ற ப்ரோக்ராமையும் நடத்தி வரும் அவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.
தற்போது டிடிஎஃப் மீது கறார் காட்டி வரும் காவல்துறையினருக்கு சித்துவிடமும் ஸ்ட்ரிக்டாக இருக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்நிலையில் விஜே சித்து மீது நடவடிக்கை பாயுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது