Thirupachi Benjamin | பிரபல ஹோட்டலில் விருந்து..பூரித்துபோன நரிக்குறவ மக்கள்! அசத்திய நடிகர்

பிரபல ஹோட்டலில் விருந்து..பூரித்துபோன நரிக்குறவ மக்கள்! அசத்திய நடிகர்

சேலத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட 45 நபர்களுக்கு  நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் பிரியாணி விருந்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

திருப்பாச்சி திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் பெஞ்சமின்.

இவர் சேலத்தில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 45 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளார்.

அவர்களுக்கு பெஞ்சமினே தன் கையால் உணவு பரிமாறி பார்த்து பார்த்து உபசரிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது

சில பகுதிகளில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை திரையரங்கிற்குள் அனுமதிகாமல் தொடர் சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில்,

நடிகர் பெஞ்சமினின் இந்த செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது. 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola