டூவீலர் மீது மோதிய திருமா கார் வழக்கறிஞரை தாக்கிய விசிகவினர் அண்ணாமலை ATTACK | Thiruma Car Accident

Continues below advertisement

விசிக தலைவர் திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞர் ஒருவர் பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் விசிகவினர் வழக்கறிஞரை தாக்கியதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனிசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் கிஷோர் என்பவரை கண்டித்து  நாடுமுழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

அதன்படி, இதன் ஒருபகுதியாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டார். 

அப்போது சென்னை பாரிமுனை பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது  வழக்கறிஞர் ஒருவரின் பைக்கில் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், திடீரென திருமாவளவன் கார் ஓட்டுநருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, காரில் திருமாவளவன் இருந்ததால் விசிகவினர் ஒன்று கூடி வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ பட்டப்பகலில் அதிர்ச்சியூட்டும் வகையில், விசிக குண்டர்கள் ஒரு வழக்கறிஞரை தாக்கியதாகக் கூறப்படுகிறது, அவர் ஒரு கார் ஓட்டுநரை மோதியதாகக் கேள்வி கேட்டதற்காக குறிப்பாக, காரில் விசிக தலைவர் திருமாளவன்இருந்தார்.

முரண்பாடாக, திருமாவளவன்  இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து ஒரு போராட்டத்தில் இருந்து திரும்பி வந்தார், ஆனால் அவரது சொந்தப் பரிவாரங்கள் சிறிது நேரத்திலேயே ஒரு வழக்கறிஞரைத் தாக்கினர் என்று கூறியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola