Tejasvi Surya marriage : தமிழக மருமகனாகும் தேஜஸ்வி?மோடி பாராட்டிய பாடகி! யார் இந்த சிவஸ்ரீ? : Sivasri

பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா சென்னையை சேர்ந்த பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி போட்ட ஒரே ஒரு போஸ்ட் மூலம் பலரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இந்த பாடகி.

34 வயதான தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பியாக இருக்கிறார். 2020ம் ஆண்டு முதல் பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவராக பதவி வகித்தார். 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தன்னுடைய 29 வயதிலேயே இளம் எம்.பியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். நாடாளுமன்றத்திலும் தனது ஆவேசமான பேச்சால் பலரது கவனத்தையும் ஈர்த்தார். 

இவர் சென்னையை சேர்ந்த கர்நாடக இசை பாடகி மற்றும் பரதநாட்டிய கலைஞரான சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தனது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்துள்ளார். பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தில் காதோடு சொல் பாடலை கன்னடத்தில் சிவஸ்ரீ பாடியுள்ளார். இவர் தனது யூடியூப் சேனலில் பாடல்கள் பாடி பதிவிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இவரது பாடல் ஒன்றை பிரதமர் மோடி பாராட்டியிருந்தார். சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்தின் இந்த கன்னட பாடல் பிரபு ஸ்ரீ ராமர் மீதான பக்தியை காட்டுகிறது. நமது கலாச்சாரத்தை நீண்ட காலம் பாதுகாப்பதற்கு இதுமாதிரியான முயற்சிகள் உதவும் என்று பாராட்டியிருந்தார்.

இந்தநிலையில் தேஜஸ்வி சூர்யாவுக்கும், பாடகி . சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்துக்கும் பெங்களூருவில் திருமணம் நடப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola