Suriya Political Entry | அரசியலில் குதிக்க ரெடி விஜயுடன் மோதும் சூர்யா?உள்ளாட்சி தேர்தலில் போட்டியா?

Continues below advertisement

அதிகாரம் இருந்தால் இன்னும் வீரியத்தோடு மக்கள் பணி செய்ய முடியும் என்று நடிகர் சூர்யா அரசியலுக்கு வரயிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

அரசியாலுக்கு வரவேண்டும் என்ற உந்துதலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும் சிலர் நேரடி அரசியலில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அதற்கு சிறந்த தற்கால உதாரணம் கேப்டன் விஜயகாந்த்.

அதே பாணியில், நடிகர் விஜயும் தற்போது அரசியலுக்கு வருவதாக அறிவித்து கட்சி பெயரையும் வெளியிட்டுள்ள நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் அரசியலுக்குள் நுழையும் முயற்சிகளை நடிகர் சூர்யாவும் எடுத்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. தனது நற்பணி மன்றம் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் நடிகர் சூர்யா, அகரம் என்ற அறக்கட்டளையை தொடங்கி ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பள்ளி கல்வி முதல் உயர் கல்வி வரை படிக்க உதவி செய்து வருகிறார். இவரின் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற பலர் அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகள் வகிக்கின்றார்கள்.

திரைத்துறையில் முன்னணி நடிகராக இருந்தாலும் இந்த சமூகத்திற்கு தன்னால் முடிந்த அளவு உதவிகளையும் சேவைகளையும் சூர்யா தொடர்ந்து செய்து வருகிறார். பல்வேறு அமைப்புகள் நடத்தும் அறக்கட்டளைகளுக்கு நிதி வழங்குவது, அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கட்டணம் வாங்காமல் சென்று கலந்துகொண்டு பேசி, பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்துவது என்று தொடர்ந்து பயணித்து வரும் சூர்யா, நேரடி அரசியலில் களம் இறங்கவும் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.மாவட்டம் வாரியாக இயங்கும் தன்னுடைய ரசிகர் மன்றமான, நற்பணி இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளில் நடிகர் சூர்யா தீவிரமாக இறங்கியிருக்கிறார். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளாக அழைத்து வெளியில் தெரியாமல் இயக்கத்தை வலுப்படுத்த ஆலோசனையும் நடத்தியிருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஆலோசனையின்போது, நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கிவிட்டார், நீங்களும் இனி நற்பணி இயக்கத்தினரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். அதிகாரம் இருந்தால் இன்னும் வீரியத்தோடு மக்கள் பணி செய்ய முடியும் என்பதை சூர்யாவிடம் எடுத்துக் கூறியிருக்கின்றனர். அதோடு, கிராமங்களில் நமது இயக்கத்தை வளர்க்க வேண்டுமென்றால், வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நமது நற்பணி இயக்கம் சார்பில் வேட்பாளர்களாக நமது நிர்வாகிகள் இறங்க வேண்டும் என்றும் சூர்யாவிடம் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசியல் என்று வந்துவிட்டால் தேவையில்லாத சிக்கல், பிரச்னைகள் வரும் என்று முதலில் சொன்ன சூர்யாவிடம், நீங்கள் இப்போதைக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்க வேண்டாம், நமது நிர்வாகிகள் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்போது, உங்களது புகைப்படத்தையும் நற்பணி இயக்க பெயரையும் பயன்படுத்த மட்டும் அனுமதி கொடுத்தால்போதும் என்று கேட்டுள்ளனர். அதன்பிறகு, சிலரிடம் ஆலோசித்துவிட்டு சூர்யா ‘ஒகே’ சொன்னதாக கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, தனது நற்பணி இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அறிவுறுத்தல்களை பொதுவெளியில் நடிகர் சூர்யா, விரைவில் வெளியிடயிருக்கிறார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram