Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ரா

கவிஞர் வைரமுத்து மற்றும் பாடகி சுசித்ரா இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மீண்டும் வைரமுத்துவை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தன்னை மனநோயாளி என குறிப்பிட்ட வைரமுத்து என்ன மனநல மருத்துவரா என சாடியுள்ளார் சுசித்ரா.

கவிஞர் வைரமுத்து மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை பாடகி சுசித்ரா முன்வைத்திருந்த நிலையில், அவரை மனநோயாளி என மறைமுகமாக சாடியிருந்தார் வைரமுத்து. இதைத்தொடர்ந்து ஓயாத சுசித்ரா வைரமுத்துவை கலாய்த்து பாடல் பாடியிருந்தார்.இந்நிலையில் தன்னை மனநோயாளி என விமர்சித்த வைரமுத்துவை மன்நல மருத்துவர் என விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்ட சுசித்ரா, வைரமுத்துவை வக்கிரமுத்து என குறிப்பிட்டு, அவர் என்ன ஆணி புடுங்கிவிட்டார் என அவருக்கு சப்போர்ட் செய்கிறீர்கள், அவர் என்ன வள்ளுவரா? பெண்களை அப்ஜெக்டிஃபை படுத்தி மட்டுமே பாடல் எழுதுபவர்.. பெண் வெறுப்பு மனநிலை கொண்டவர்..அவர் எல்லாம் கவிஞரா? 
தற்போது மனநல மருத்துவர் மாதிரி அறிவுரை வழங்கிட்டு இருக்காரு வேணுனா நோபல் பரிசு கொடுத்தரலாமா?
இளம் தலைமுறையினருக்கு வழிவிடாமல் இந்த கெளவன் ஆண்டாண்டுகளாய் திரையுலகை தன் கைக்குள் வைத்திருக்கிறார்.வாலி விவேகா போன்ற நல்ல கவிஞர்களும் தான் உள்ளனர். நான் வைரமுத்துவை மட்டும்தான் குற்றம் சொல்கிறேன், தற்போதும் நான் மனநல பாதிக்கப்பட்டு தான் இதுபோல் பேசி வருகிறேன் என நினைத்து வைரமுத்துவுக்கு சப்போர்ட் பண்ணீங்கனா நாளைக்கு உங்க பொண்ணுக்கும் இதே நிலைமை தான் வரும் என தெரிவித்துள்ளார் சுசித்ரா.

மேலும் இன்னும் இரண்டு பாடல்களை ரீமிக்ஸ் செய்து வைரமுத்துவை விமர்சித்துள்ளார். அறியாத வயசு என்ற பாடலை ரீமிக்ஸ் செய்த அவர், வைரமுத்து வீட்டில் பேண்டீன் சாம்பூக்கு பஞ்சமில்லை,, வெட்டிறனும் இந்த நாயி வாலை என சரமாரியாக விமர்சித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola