தனுஷுடன் இருக்கும் ஆர்த்தி ரவி...கொளுத்திப் போட்ட சுசித்ரா | Ravi | Keneesha | Suchitra About Aarti

ரவி மோகன்-ஆர்த்திக்கு இடையேயான பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், பாடகி சுசித்ரா இநடிகர் தனுஷுடன் ஆர்த்தி ரவி இருக்கும் புகைப்படத்தை, வெளியிட்டிருப்பது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

கோலிவுட் திரையுலகில் அதிகம் பேசப்பட்ட ஜோடிகளில் ஒன்றாக இருந்து வந்தது ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடி. இப்படியான நிலையில்தான் நடிகர் ஜெயம் ரவி கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்தார். இந்த விவாகரத்திற்கு பல்வேறு காரணங்கள் இணையத்தில் வதந்திகளாக பரவின. தனது திருமண உறவில் தான் மதிக்கப்படவில்லை என ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். ஜெயம் ரவிக்கும் கெனிஷா என்கிற பாடகிக்கும் உறவு இருப்பதாக சமூக வலைதளங்கள் பரவின. இந்த வதந்திகளை ஜெயம் ரவி மறுத்தார். பின் சொன்னதற்கு மாறாக கெனிஷாவுடன்  சமீபத்தில் திருமண விழாவில் கலந்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரவி மோகன் அறிக்கை வெளியிட்டார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கெனிஷா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். 

இந்த நிலையில் தான் ரவி மோகன் மற்றும் கெனிஷா உறவு குறித்து சர்ச்சைக்கு பெயர் போன பிரபல பாடகி சுசீத்ரா கருத்து தெரிவித்துள்ளார். சமீப காலமாக ஜெயம் ரவி-கெனிஷாவிற்கு ஆதரவாக சில பதிவுகளை வெளியிட்டிருந்தார். இது குறித்த வீடியோக்களில் அவர் ஆரத்தி தாய்மையை வைத்து பிறரை ஏமாற்றுவதாகவும், இவர்கள் குறித்த விஷயத்தில் முடிவெடுக்க யாரும் நீதிபதி இல்லை என்றும் கூறினார். இந்த நிலையில், ஜெயம் ரவியுடன் ஒன்றாக இருக்கும் போதே, தனுஷ் உடன் உறவில் இருந்ததாக கூறியிருக்கிறார். இது குறித்த நேர்காணலிலும் கலந்து கொண்டார். இதையடுத்து, தற்போது ஆர்த்தி ரவி, தனுஷுடன் இருக்கும் போட்டோவையும் வெளியிட்டிருக்கிறார். 

இந்த போட்டாேவில் ஆர்த்தி தனுஷுடன் நாக்கை வெளியில் தள்ளியாவாறு போட்டோ எடுத்திருக்கிறார். இதில் கேப்ஷனாக சுசித்ரா, ChatGPT-ஐ டவுன்லோட் செய்து, நாக்கை வெளியில் தள்ளி போட்டோ எடுத்திருப்பதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன என்று கேளுங்கள். என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்போது, ஆர்த்தி-ஜெயம் ரவி விஷயத்திலும் இப்படி இவர் ரியாக்ட் செய்து வருவதை ஒட்டி, பலர் “நீங்கள் ஓகே-வாக இருக்கிறீர்களா?”என்றும் எதுவும் நம்பும்படி இல்லை என்றும் பலர் கூறி வருகின்றனர். மேலும் இந்த விவாகரதிற்கும் தனுஷ் தான் காரணமா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola