Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal

Continues below advertisement

நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் இன்று நடைபெற இருந்த நிலையில், திடீரென இன்று காலை ஸ்மிருதியின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட ஸ்மிருதியின் திருமணம் நின்றுபோனதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய க்ரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இந்தியர்கள் பலரின் க்ரஸாக இருந்து வரும் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் இன்று நடைபெற இருந்தது. ஸ்மிருதி கடந்த சில ஆண்டுகளாக மகாராஷ்டிராவை சேர்ந்த இசையமைப்பாளர் பலாஷ் மூச்சல் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர்களின் திருமண அறிவிப்பு வெளியானது.

தனக்கு நிச்சயமானதை தனது நண்பர்களுடன் சேர்ந்து டான்ஸ் ரீல் எடுத்து வித்தியாசமான முறையில் அறிவித்தார் மந்தனா..இதைத்தொட்ர்ந்து பலாஷ் மூச்சல் ஸ்மிருதிக்கு கிரிக்கெட் மைதானத்தில் கண்ணைக்கட்டி ப்ரொபோஸ் செய்த வீடியோவை வெளியிட்டு இணையத்தை அலறவிட்டார். சோசியல் மீடியா முழுக்க ஸ்மிருதி பலாஷின் ரீல்ஸ் வட்டமடித்து வந்த நிலையில், இன்று காலை ஸ்மிருதியின் பண்ணை வீட்டில் இந்த ஜோடியின் திருமணம் நடைபெற இருந்தது.

ஆனால் துரதிஷ்டவசமாக திருமண ஏற்பாடுகளுக்கு நடுவே திடீரென ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சாங்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு பிறகு ஸ்மிருதியின் தந்தை மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்,

இந்நிலையில் தனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ள நிலையில், தனக்கு திருமணம் செய்துகொள்ள மனமில்லை என கூறி ஸ்மிருதி தனது திருமணத்தை ஒத்திவைத்துவிட்டதாக ஸ்மிருதியின் மேனேஜர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola