SJ Surya and Raghava lawrence fans fight : மோதிக்கொண்ட ரசிகர்கள்.. பதறிப்போன SJ சூர்யா!

Continues below advertisement

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் .ஜே சூர்யா முன்னிலையிலே மோதிக்கொண்ட ரசிகர்கள்

யார் அவர்கள் அருகில் இருப்பது என போட்டோ போட்டியால் முகம் சுளிப்பு

காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பெண் விவசாயிக்கு மாற்றம் அறக்கட்டளை சார்பில் விவசாய டிராக்டர் சாவியினை திரைப்பட நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

அனைவரும் தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்து அதை மாற்றத்தை நோக்கி என எக்ஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுகோள் விடுத்தனர்.

மாற்றம் என்ற சமூக அமைப்பினை உருவாக்கி கடந்த சில மாதங்களாக பத்துக்கும் மேற்பட்ட விவசாய டிராக்டர்களை திரைப்பட நடிகரும்,  இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வழங்கி வருகிறார். அவருடன் தற்போது திரைப்பட பிரபலங்களான எஸ் ஜே சூர்யா , கே பி ஒய் பாலா , அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோ ரூம் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அவ்வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில்  எஸ் ஜே சூர்யா காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் மூத்த விவசாயி முனுசாமி -  தெய்வயானை குடும்பத்திற்கு டிராக்டர் ஒன்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

கிராமத்திற்கு வருகை புரிந்த திரைப்பட பிரபலங்களை கிராம மக்கள் சிலம்பம் மான் கொம்பு ஆட்டமுடன் , மேளதாளம் முழங்க பூ தூவி வரவேற்றனர்.

அப்போது மேடையில் இரு தரப்பிற்கு இடையே வாய் தகறாரு ஏற்பட்டது இதனால் எஸ் ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவர் முகம் மாறியது. யார் இருவரும் அவர்கள் அருகே நிற்பது என மாறி மாறி  சண்டை போட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை எஸ் ஜே சூர்யா சமாதானம் செய்த பிறகு நிகழ்ச்சி நடைபெற்றது

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram