”நான் இப்படி தான் நடிப்பேன்” சிம்ரன் Vs ஜோதிகா?பற்றி எரியும் புது பஞ்சாயத்து | Simran Vs Jyotika

தான் ஆன்டி ரோலில் நடிப்பதை மட்டம் தட்டி பேசிய பிரபல நடிகைக்கு, டப்பா ரோலைவிட அது எவ்வளவோ மேல் என நடிகை சிம்ரன் பதிலடி கொடுத்திருந்தார். சிம்ரனை ஆன்டி ரோல் நடிகை என சொன்னது யார்? ஜோதிகாவ இல்ல நயந்தாராவா என இணையத்தில் பரபர வாதம் நடைப்பெற்று வருகிறது

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிம்ரனுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதைப் பெற்றுக்கொண்ட சிம்ரன், சமீபத்தில் நான் என்னுடைய சக நடிகைக்கு உங்களை இந்த கதாபாத்திரத்தில் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றேன். அதற்கு அவர் உடனடியாக ஆண்ட்டி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு இது எவ்வளவோ மேல் என்று பதில் அளித்திருந்தார். அறிவில்லாத பதில் அது. நிச்சயமாக நான் அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. எனக்கு இன்னும் நல்ல பதில் கிடைத்து இருக்க வேண்டும். இதுபோன்ற டப்பா ரோல் செய்வதற்கு பதில் கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற கதாபாத்திரங்கள் வந்திருக்கலாம் என்று சிம்ரன் கூறியிருந்தார்.

தற்போது சிம்ரன் குறிப்பிட்ட அந்த நடிகை யார்? என்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஒரு சில இணையவாசிகள் சிம்ரன் குறிப்பிட்டது ஜோதிகா என்று சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். ஏனென்றால், சிம்ரன் முன்னணி கதாநாயகியாக நடித்த காலத்தில் அவருக்கு நிகரான கதாநாயகியாக உலா வந்தவர் ஜோதிகா. ஏனென்றால் சமீபத்தில் டப்பா கார்டல் என்ற இந்தி வெப்சீரிஸில் ஜோதிகா நடித்துள்ளார். சிம்ரன் டப்பா என்று மறைமுகமாக ஜோதிகாவையே குறிப்பிட்டிருப்பதாக நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர்.  அதேசமயம், சிலர் ஜோதிகாவையும் இதுபோன்று பதின்ம பருவ குழந்தைகளுக்கு தாயாக நடித்திருப்பதால் அவர் சிம்ரனை இவ்வாறு கூறியிருக்க வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola