Simbu 47 : STR - GVM - ARR 3வது முறையாக இணைந்த கூட்டணி! வெளியானது FIRST LOOK | Simbu| Venthu Thaninthathu Kaadu

Continues below advertisement

முன்னதாக சிம்பு நடிப்பில் ஜி.வி.எம் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மாநாடு படத்தை முடித்து கொடுத்த கையோடு சிம்பு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவிட்டார். இது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. குறிப்பாக சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானதும் , அந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர்.

சிம்புவின் 47 வது படமான உருவாக உள்ள இந்த புதிய படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. STR , GVM கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு ’என பெயர் வைத்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இதில் சிம்பு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் உள்ளார். முன்னதாக சிம்பு நடிப்பில் ஜி.வி.எம் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் எந்த காலத்திற்கும் ஃபிரஷ் ஃபீலை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தற்போது உருவாக உள்ள 'வெந்து தணிந்தது காடு ‘படம் இந்த STR , GVM கூட்டணியின் மூன்றாவது படம் .

இவர்களில் முந்தைய படங்களுக்கு இசையமைத்த எ.ஆர்.ரஹ்மானே வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இசையமைக்க உள்ளார். படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். #SilambarasanTR47 என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாக உள்ளது.சிம்பு தற்போது கோகுல் இயக்கத்தில் ’கொரோனா குமார்’ என்ற படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தில் வட சென்னை இளைஞராக சிம்பு வலம் வருவார் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , கார்த்தி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான காஷ்மோரா, ரௌத்திரம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்தான் ‘கொரோனா குமார்’ படத்தின் இயக்குநர் கோகுல் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ‘ சுமார் மூஞ்சு குமார்’ என்ற விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பலரையும் கவர்ந்தது.

இதனை அடிப்படையாக கொண்டுதான் ‘கொரோனா குமார்’ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நடிப்பது மட்டுமின்றி, யுவன் உருவாக்கியுள்ள ஆல்பம் சாங் ஒன்றில் ,சிம்பு பாடல் பாடியுள்ளார். இந்த ஆல்பம் பாடலில் , காளிதாஸ் ஜெயராம் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். பாடலில் இடம்பெறும் நடன காட்சிகளை பிக்பாஸ் புகழ் சாண்டி மாஸ்டர் இயக்கியுள்ளார். தற்போது எடிட்டிங் பணியில் உள்ள பாடல் விரைவில் யுவனின் யுடியூப் பக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிம்பு இசையமைப்பாளராகவும், பாடகராகவும் களமிறங்கியிருந்தார். அதன்பிறகு சிறு சலசலப்பு ஏற்படவே , மீண்டும் உடல் எடை குறைத்து முழு மூச்சில் நடிப்பில் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram