Shruthi Narayanan Video | ”ஆண்கள் LUST-க்கு ஏங்குறாங்க சுக்குநூறா உடைச்சிட்டீங்க” ஸ்ருதி நாராயணன் ஆவேசம் | Siragadikka Aasai

சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்ருதி நாராயணன் அந்தரங்க வீடியோ வெளியான நிலையில் ஆண்கள் காமத்திற்காக ஏங்குபவர்கள் என்று மீண்டும் காட்டமாக பதிலடி கொடுத்து சமூக வலைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ குறித்து கடும் ஆவேசத்துடன் கருத்து தெரிவித்திருந்த நடிகை ஸ்ருதி நாராயணன் மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "இந்த விவகாரத்தில் அனைத்தும் எல்லை மீறி போய்விட்டது. பாதிக்கப்பட்டவரிடம் பேச அனைவருக்கம் ஒரு கருத்து உள்ளது. அது நல்லது, கெட்டது எதுவாக இருந்தாலும் சரி. 

ஆனால், போன் திரைக்குப் பின்னால் இன்னும் கண்டுபிடிக்கப்படாத, ஒரு பெண் வாழ்க்கையை கெடுக்கத் துடிக்கிற அந்த வெட்கக்கேடான நபரைப் பற்றி யாருக்கும் அவதூற பேச நேரமில்லை. இன்னும் இந்த விஷயம் ஒரு பெண்ணைச் சுற்றி நடக்கிறது என்று நினைக்க 2 வினாடிகள் கூட யாருக்கும் இல்லை. நடக்கும் அனைத்திலும் அவள் மன ரீதியாக பாதிக்கப்படலாம். காட்டுத் தீ போல இதை பகிர்வதன் மூலம் அனைத்து ஆண்களும் எதிலும் காமத்திற்காக வேட்டையாட ஏங்குபவர்கள் என்பதை இது நிரூபிக்கிறது. 

நானும் உணர்வுகளை கொண்ட ஒரு பெண் என்பதை மீண்டும் சொல்ல வேண்டியது இல்லை.  இந்த அனைத்து பிரச்சினைகளாலும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டவளின் ஒரு தாழ்மையான வேண்டுகோள், மனிதகுலத்திற்காக இதை நிறுத்துங்கள் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

இந்த விவகாரத்தில் இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டவர் யார்? என்ற தகவல் இதுவரை வெளியாகாவில்லை. பட வாய்ப்பிற்காக நடத்தப்பட்ட ஆடிஷனிற்காக இந்த சம்பவம் அரங்கேறியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் ஸ்ருதி நாராயணன் மிகவும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola