
Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி
சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்ருதி நாராயணன் அந்தரங்க வீடியோ வெளியான நிலையில் அதற்கு காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சிறகடிக்க ஆசை ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலை எஸ்.குமரன் என்பவர் இயக்கி வருகிறார். இதில் ஹீரோவாக முத்து என்ற கேரக்டரில் வெற்றி வசந்த்தும் ஹீரோயினாக மீனா கேரக்டரில் கோமதி பிரியா நடிக்கின்றனர். மேலும் இந்த சீரியலில் சுந்தரராஜன், அணிலா, ஸ்ரீதேவா, பிரீத்தி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பவர்களில் நடிகை ஸ்ருதி நாராயணன் ஒருவர். கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடிப்பை தொடங்கினார் ஸ்ருதி நாராயணன். கல்லூரி படிக்கும்போதில் இருந்தே நடிப்பின் மீது ஸ்ருதிக்கு ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதையடுத்தே சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அவருக்கு திருப்பு முனையை தந்த சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை சீரியல் தான். இதில் வித்யா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். மிகவும் பிரபலமான சீரியல் என்பதால் இவரின் கேரக்டரும் இதில் பேசக்கூடிய கேரக்டர் தான். இந்நிலையில் தான் இவரின் அந்தரங்க வீடியோ என சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தீயாய் பரவியது.
இது சீரியல் ரசிகர்களை மட்டுமன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் இந்த வீடியோவை நடிகையே வெளியிட்டிருக்கலாம் எனவும் பேச்சு அடிபட்டது. இந்நிலையில் ஸ்ருதி நாராயணன் இதுகுறித்து காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு ஏஐ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதன் மூலம் அந்த வீடியோ ஏஐ வீடியோ என ஸ்ருதி விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும் மற்றொரு ஸ்டோரியில், இது மனித வாழ்க்கை உங்கள் பொழுதுபோக்கு அல்ல. ரொம்ப கடினமான காலகட்டத்தில் இருக்கிறேன். நானும் ஒரு பெண்தான். எனக்கும் உணர்வுகள் உண்டு. அனைத்தையும் காட்டுத்தீ போல் பரப்பாதீர்கள். உங்களுக்கு வீடியோ பாக்கணும்னா தாய், சகோதரி, நீங்கள் காதலிக்கும் பெண்னை பாருங்கள் அவர்களும் பெண் தான். அவங்களுக்கும் இதே மாதியான உடல் தான் இருக்கு. வேண்டுமென்றால் அவர்களின் வீடியோக்களை பார்த்து ரசியுங்கள் எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.